எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கும். அதை யாராலும் மறைக்க முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை கடைசி மூச்சு உள்ளவரை கட்டிக் காப்பேன்” : ஜெயலலிதா பேச்சு.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா சென்னை தலைமை கழகத்தில் இன்று நடந்தது. அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை வரவேற்று பேசினார். எம்.ஜி.ஆர் சிலையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு Amoxil online விழாவில் கலந்து கொண்டுள்ள தலைமை கழக நிர்வாகிகளே, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, கழக நிர்வாகிகளே, பெரியோர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இன்று நமது நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காரிமங்கலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவ சிலை முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல் தெரிந்ததும் தலைமை கழகத்தின் சார்பில் புதிய சிலை அமைக்கப்படும் என அறிவித்து இருந்தேன். அப்போது தி.மு.க. அரசு அந்த இடத்தில் சிலை அமைக்க அனுமதி வழங்க வில்லை.

இன்று மக்களின் ஆதரவோடு திறந்து வைக்கிறேன். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, ஆனால் மக்களின் மனதில் நிரந்தரமாக நிற்பவர் எம்.ஜி.ஆர்.தான்.

பூமி உள்ளவரை எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கும். அதை யாராலும் மறைக்க முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை கடைசி மூச்சு உள்ளவரை கட்டிக் காப்பேன்” என்று பேசினார்.

Add Comment