ராமநாதபுரத்தில் கல்வீச்சு: 7 அரசு பஸ்கள் சேதம்

பரமக்குடி கலவரம் தொடர்பாக நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதில் 7 அரசு பேருந்துகள் சேதமடைந்தன.

 

இன்று நடந்த சம்பவத்தில் பட்டுகோட்டையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே 1 பேருந்தும், ஆர்.எஸ்.மடை அருகே 2, மஞ்சூரில் 2, எஸ்.பி.பட்டினம் 2 என மொத்தம் 7 அரசு பேருந்துகள் இந்த கல்வீச்சு தாக்குதலில் சேதமடைந்தன.

 சாயல்குடி அருகே கோஷ்டி மோதல்: 7 பேருக்கு அரிவாள் வெட்டு

ராமநாதபுரம் தூத்துக்குடி சாலையில் சாயல்குடி அருகே சிக்கல் காவல் சரகத்துக்கு உட்பட்டபேய்க்குளத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினரும், சொக்காணைச் சேர்ந்த Buy Doxycycline ஒரு தரப்பினரும் கோஷ்டி மோதலில் இறங்கினர்.

 

இம்மானுவல் சேகரன் நினைவுநாள் தொடர்பாக நிகழ்ந்த இந்த கோஷ்டி மோதலில் ஒரு பெண் உள்பட 7 பேருக்கு வெட்டு விழுந்தது.

படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இது தொடர்பாக இரு தரப்பிலும் 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Add Comment