இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவராக முனீ ருல் மில்லத் பேராசிரியர் .கே.எம்.காதர் மொஹிதீன் M .A . அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

கும்பகோணம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தை அடுத்த திருமங்கலக்குடியில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தலைமை வகித்தார். மேலிடப் பார்வையாளரும் தேசிய செயலாளருமான குரம் அனிஸ்உமர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தமிழக அளவில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (நேற்று) முதல் வரும் நான்காண்டுக்கு அந்த பொறுப்பில் இருப்பார்கள்.அதன்படி, மாநில தலைவராக காதர்மொய்தீன், பொதுச் செயலாளராக முகமதுஅபுபக்கர், பொருளாளராக ராமநாதபுரம் ஷாஜகான் மற்றும் செயலாளர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்தை ஏற்றுக்கொள்வது.

நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவது. தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து இடம்பெற்று உள்ளாட்சி தேர்தலில் 10 சதவிகித இடங்களை கேட்டுப்பெறுவது.

Viagra No Prescription style=”text-align: justify;”>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது. உள்ளாட்சி தேர்தலில் தோழமை கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசியல் ஆலோசனை குழு, சென்னையிலுள்ள மாநில நிர்வாகிகள், வடசென்னை, தென்சென்னை, மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது உயர்த்தித்தரப்படும் என தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 தகவல் : நல்லூரான் 

Add Comment