தென்காசியில் இரவு பஸ்கள் நிறுத்தம் : பொதுமக்கள் அவதி

தென்காசி, செங்கோட்டை பகுதியில் இரவு நேரம் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பரமக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக ஆங்காங்கே ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து தென்காசி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் 7 மணிக்கு மேல்தான் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முக்கிய இடங்களில் போலீஸ் Buy Ampicillin Online No Prescription பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

மாலையில் தென்காசியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இரவு 7 மணிக்கு மேல் வெளியூர்களுக்கு செல்லும் அரசு ரூட் பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதே போன்று தான் செங்கோட்டையிலிருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள் மற்றும் ரூட் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இரவு நேரம் பஸ் கிடைக்காததால் ஆட்டோ, வேன்களில் அதிக கட்டணம் கொடுத்து கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

செங்கோட்டையிலிருந்து சென்னை, பெங்களூரூ, புதுச்சேரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தொலை தூர பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே செங்கோட்டை, தென்காசியில் இருந்து புறப்பட்டு சென்றன. இதேபோல் சுரண்டையில் அரசு பஸ்கள் அனைத்தும் நேற்று முன்னறிவிப்பின்றி மாலை 6 மணிக்கு மேல் டெப்போக்களுக்கு சென்றதால் இரவு நேரங்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்களும், பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

Add Comment