இனக் கலவரங்களைத் தடுக்க மீண்டும் அமைதி குழுக்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, செப். 13: இனக் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ள கிராமங்களில் மீண்டும் அமைதி குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

பரமக்குடி சம்பவம் தொடர்பாக, சட்டபேரவையில் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்: 

பரமக்குடியில் நடைபெற்ற சம்பவம் இனக் கலவரம் இல்லை என பேரவையில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். இனக் கலவரம் இல்லை என்றால் அரசுக்கு அதில் மகிழ்ச்சி தான். ஆனால், நடந்த உண்மை, அதன் பின்னணி என்னவென்றால், ராமநாதபுரம் மாவட்டம் மண்டல மாணிக்கம் என்ற கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் buy Levitra online சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. 

அதைத் தொடர்ந்து தான் அந்த கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் பழனிகுமாரின் கொலை நடந்திருக்கிறது. அதன் பின்னர் தான் ஜான் பாண்டியன் படையெடுத்து அங்கே புறப்பட்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்று இருக்கின்றன. 

ஆகவே, ஒரு சங்கிலித் தொடர் போல் இந்த நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன. இத்தகைய சம்பவங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தான் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது. 

சிலைகளுக்கு கூண்டு: கடந்த ஆட்சிக் காலத்தில் கூட அம்பேத்கர் சிலைகளும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளும் இருக்கின்ற இடங்களில் இத்தகைய கலவரங்கள் அடிக்கடி வந்ததுண்டு. யாராவது ஒருவர் அந்த சிலைக்கு ஒரு செருப்பு மாலையை அணிவித்து விடுவார். பின்னர், பதற்ற நிலை உருவாகும். வன்முறைக் கலவரங்கள் ஏற்படும். ஆகவே, இதைத் தடுப்பதற்காகத் தான், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், சிலைகளைச் சுற்றி ஒரு கூண்டு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தேன்.  போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் கூண்டுக்கு பூட்டு போட்டு அந்தச் சாவியை அவர்கள் வைத்துக் கொள்வார்கள். பிறந்த நாள், நினைவு நாள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் போது அதைத் திறந்து விடுவார்கள். யார் வேண்டுமானாலும் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு வரலாம். இத்தகைய

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் எடுத்ததால் தான், இனக் கலவரங்கள் தடுக்கப்பட்டன. ஆகவே, இப்போதும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அவற்றை எல்லாம் இந்த அரசு எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், எங்கெல்லாம் இனக் கலவரங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்ததோ, அத்தகைய கிராமங்களில் எல்லாம் அமைதிக் குழு ஏற்படுத்

தப்பட்டது.

 

கலவரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிந்தால், மாவட்ட ஆட்சியர் அங்கே செல்வார். இரு தரப்பினரையும் அழைத்து, அந்த அமைதிக் குழுவைக் கூட்டி பேச்சு நடத்துவார். 

ஆனால், தி.மு.க. ஆட்சியின் போது, இந்த பழக்கமெல்லாம் விடுபட்டு விட்டது. ஆகவே, மீண்டும் இந்த அமைதிக் குழுக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் முதல்வர் ஜெயலலிதா. 

Add Comment