தமிழகம் முழுவதும் 6 நாட்கள் நடக்கிறது ஆசிரியர் இடமாறுதல் “கவுன்சிலிங்”: தொடக்கப்பள்ளி-16-20-ந்தேதி; உயர்நிலைப்பள்ளி-19, 20-ந்தேதி

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மூலம் வழங்கப்படுகிறது. வழக்கமாக மே மாதம் இறுதிக்குள் ஆசிரியர் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டு விடும்.
இந்த ஆண்டு பொதுத்தேர்தல், புதிய அரசு பதவி ஏற்பு போன்ற நிகழ்வுகள் மே மாதம் நடைபெற்றதால் ஆசிரியர் கவுன்சிலிங் தள்ளிப்போனது. கலந்தாய்வு நடைபெறுமா? சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது. புதிய அரசில் பள்ளிக்கல்வி அமைச்சராக சி.வி. சண்முகம் பொறுப்பேற்றபின் ஆசிரியர் கவுன்சிலிங் தற்போது நடத்தப்படுகிறது.
சமச்சீர் Cialis online கல்வி, பாடப்புத்தகம் போன்ற பிரச்சினையாலும் ஆசிரியர் கலந்தாய்வு தாமதமானது. காலாண்டு தேர்வு இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 1 முதல் 8 வரை உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
வருகிற 16, 17, 19 மற்றும் 20-ந்தேதி ஆகிய 4 நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது. அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில், உதவி கல்வி அதிகாரிகள் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு 19 மற்றும் 20-ந்தேதி யில் கலந்தாய்வு நடக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடக்கிறது.
முதல் நாள் மாவட்டத்திற்குள் இடமாறுதல் விரும்புவர்களுக்கும் மறுநாள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறி செல்ல விரும்புவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. சென்னையில் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
பணியில் சேர்ந்து ஒரு வருடம் நிறைவு பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பே இட மாறுதலில் செல்ல விரும்புவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பித்து இருந்தனர்.

Add Comment