தபால் ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

தபால் துறையில் 4-ம் பிரிவு ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணை அடிப்படையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.

போட்ஸ்மென், தபால் பிரிப்பு, ஸ்டாம் பதிவு செய்பவர், மணியார்டர் அனுப்புவது, உள்ளிட்ட பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கருணை அடிப்படையில் தமிழகம் முழுவதும் பணியாற்றும் 103 ஊழியர்களை மத்திய அரசு திடீரென பணியில் இருந்து நீக்கியது.

 கடந்த மாதம் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குடும்பத்துடன் சென்னை அண்ணா சாலை தபால் அலுவலகம் வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நாளை வரை பட்டினி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

Buy cheap Amoxil

Add Comment