ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

 

சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அமைப்பாளர் வக்கீல் ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் கடந்த 11-ந்தேதி அன்று வல்லநாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை. அவர் சட்ட விரோத காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் மகாராஜன் ஆஜராகி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட ஜான்பாண்டியன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். அதனால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார். மனுதாரர் தரப்பில் வக்கீல் சங்கர சுப்பு ஆஜராகி வாதாடியாதாவது:-
ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் 40 மணி நேரம் சிறை வைக்கப்பட்டுள்ளார். இது சட்டவிரோத காவல் ஆகும். அவரது கைதை தொடர்ந்து வன்முறை சம்பவத்தில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்ட விரோத காவலில் வைக்கப்பட்ட ஒவ்வொரு நிமிடமும் போலீசார் பதில் சொல்ல வேண்டும். இதற்கு பல்வேறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் உள்ளன. அவர் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு Bactrim No Prescription தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டார் என்பது குறித்து போலீசார் பதில் அளிக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து 2 வார காலத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு மனுவில் டி.ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் ஒரு பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு இருந்ததற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனிப்பட்ட முறையில் போலீஸ் அதிகாரியின் பெயரை சேர்க்க கூடாது என்றும், அதனை உடனடியாக நீக்குமாறும் மனுதாரர் வக்கீலை நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து போலீஸ் அதிகாரியின் பெயர் வழக்கு மனுவில் இருந்து நீக்கப்பட்டது.

Add Comment