தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகவில்லை: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து, 16-ந் தேதி சென்னையிலும், 20-ந் தேதி மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

குடும்பத்தில் ஒரு வருக்கு வேலை கொடுக்க வேண்டும். Ampicillin No Prescription காவல் துறை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் பதில் தலித் மக்களுக்கு எதிராக அமைந்துள்ளது. நீதி விசாரணை தேவையில்லை என்று அவர் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜான்பாண்டியன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது தான் இந்த சம்பவத்துக்கு தூண்டு கோலாக அமைந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தையும் இணைந்து திருச்சியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தது. திருச்சி இடைத் தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பா.ம.க.வுடன் விடுதலை சிறுத்தை கூட்டணி வைத்து போட்டியிடுவது குறித்து 17-ந் தேதி நடைபெற இருந்த மாநில செயற்குழு கூட்டம் தள்ளி வைக்கப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வில்லை. தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்கிறோம். தி.மு.க. வுடன் விரிசலும் இல்லை. கசப்பும் இல்லை. பா.ம.க. பொதுக்குழுவில் உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தையுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானம் நிறை வேற்றி அழைப்பு விடுத்தது. மாநில செயற்குழுவில் இது குறித்து முடிவு செய்யப்படும். திருச்சி இடைத் தேர்தலில் விடுதலை சிறுத்தை போட்டியிடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வன்னியரசு, பாவலன், சங்கத்தமிழன், சேது வேரா, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

இப்படிக்கு,
மாலைமலர் ஆசிரியர் குழு.

Add Comment