கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு நெல்லை மஜீத் போட்டியா ?

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு நெல்லை மஜீத் போட்டியா ?

தமிழகமுழுவதும் பல்வேறு பரபரப்புக்கள் நிலவினாலும் , அனைத்து அரசியல் வாதிகள் , பொதுமக்களுக்கு மத்தியில் எப்போது உள்ளாட்சி தேர்தல் என்ற பாரபரபுதான் காணப்படுகிறது .அதே போன்று  கடையநல்லூர் நகராட்சிக்கு எந்த கட்சியின் சார்பில் யார் ,யார் நிர்கப்போகின்றார் என்ற வினாவும் பொதுமக்களால் பேசப்படுகின்றன .

என்ன இருந்தாலும் இரண்டு அணிகள் களத்தில் பிரதான மாக கருதப்படும் . ஒன்று ஆளும் அதிமுக அணி  ,மற்றொன்று திமுக அணி . திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது .
அப்படி திமுக அணியில் கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டால் , யார் போட்டியிடுவார் ? தற்போதே அக்கட்சியில் போட்டா போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது .
அக்கட்சியின் சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியை கேட்டும் கிடைக்காத , அக்கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் தற்போது களத்தில் முன்னணியில் உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செய்யது  , நகரசெயலாளரும் மகாராணி ஜவுளிக் கடை உரிமையாளருமான அப்துல் லத்தீப் , அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் அக்பர் டிராவல்ஸ் உரிமையாளருமான அக்பர் ஆகியோரும் கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம்  கேட்டுகொண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
எது எவ்வாறு Buy Levitra Online No Prescription இருந்தாலும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத்தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கின்றதோ , அவரின் வெற்றிக்கு களம் இறங்கி பாடு படுவோம்  என்று அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை என்றால் அனைத்து பகுதி மக்களுக்காவும் போராடியது ,அங்கீகரிக்க படாமல் இருந்த அனைத்து பகுதி மக்களுக்காவும் சதி ,சமய வேறு பாடு காட்டாமல் உண்ணா விரதப்போராட்டம் நடத்தி வெற்றிகொண்டது , அநியாயமாக குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு உயர்த்தப்பட வீட்டு வரியையும் ,வணிகர்களுக்கு அநியாமாக உயர்த்தப்பட்ட வணிக வரியையும் குறைக்கா கோரி தொடர்போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டது போன்ற பல்வேறு விசயங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கு சாதகமாக அமையும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர் .

தகவல் : நல்லூரான் 

Add Comment