உணவின்றி ஓமனில் சிக்கித் தவிக்கும் குமரி தொழிலாளர்கள்: அரசு உதவுமா?

நாகர்கோவில்: ஓமன் நாட்டு நிறுவனம் ஒன்றால் ஏமாற்றப்பட்ட குமரி கட்டிட தொழிலாளர்கள் 5 பேர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம், வாழ்வச்சகோஷ்டம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கனகராஜ், சுஜன்குமார், ஆபிரகாம், செல்வகுமார், மோகன்குமார், மரியமார்க். அந்த 5 பேரும் கட்டுமானப் பணி செய்வதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஓமன் நாட்டிற்கு சென்றனர்.

அவர்கள் விசாவை நீட்டிக்க விரும்பவில்லை. எனவே, விசா காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கம்பெனியில் முறையாக விண்ணப்பம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களை வேலைக்கு வைத்த நிர்வாகம் அவர்கள் விசா காலம் முடிந்து 10 மாதங்கள் ஆகியும் அவர்களை வெளியில் விடுவதற்கு மறுத்துவிட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு சம்பளம வழங்குவதையும் அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் 5 பேரும் உணவுக்கு கூட வழியின்றி தற்போது ஓமனில் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஓமனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுள்ளனர். தூதரகம் ஒவ்வொருவருக்கும் தலா 20 ரியால் வீதம் உதவித்தொகை வழங்கியுள்ளது.

ஓமனில் உள்ள மனித உரிமை தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கவும் அறிவுறித்தியுள்ளது. அவர்களும் அதேபோல் மனு கொடுத்துள்ளனர். ஆனால் மனு கொடுத்து 7 மாதங்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் மீணடும் இந்திய தூதரத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இநத நிலையில் உங்களை இந்தியாவுக்கு அனுப்ப எங்களுக்கு Doxycycline No Prescription அதிகாரம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

5 பேரையும் மீட்கக் கோரி அவர்களது உறவினர்கள் ஹெலன் டேவிட்சன் எம்.பி.யை சந்தித்து கண்ணீருடன் மனு கொடுத்தனர். மாவட்ட கலெக்டரிமும் மனு கொடுத்துள்ளனர்.

oneindia.in

Add Comment