உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அசத்தல் வெற்றி

ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், “பிபா 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று ஜோகனஸ்பர்க், “சாக்கர் சிட்டி மைதானத்தில் நடந்த “ஜி பிரிவு லீக் போட்டியில், உலகின் “நம்பர்-1 அணியான பிரேசில் அணி, ஐவரி கோஸ்ட் (“நம்பர்-26) அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான போட்டியின் துவக்கத்தில் இருந்தே, இரு buy Levitra online அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஐவரி கோஸ்ட் அணியினர் தங்களுக்கு கிடைத்த “பிரி கிக் வாய்ப்பை கோட்டைவிட்டனர். ஆட்டத்தின் 18, 20வது நிமிடத்தில் கிடைத்த “கார்னர் கிக் வாய்ப்பை வீணடித்த பிரேசில் அணிக்கு, 25வது நிமிடத்தில் லூயிஸ் பேபியானோ சூப்பர் கோலடித்து நம்பிக்கை தந்தார். தொடர்ந்து போராடிய ஐவரி கோஸ்ட் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்கு, ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் லூயிஸ் பேபியானோ 2வது கோல் அடித்து அசத்தினார். பின்னர் 62வது நிமிடத்தில் காகா கொடுத்த “பாசை பெற்ற இலானோ, ஒரு சூப்பர் கோல் அடிக்க பிரேசில் அணி 3-0 என வலுவான முன்னிலை பெற்றது.

இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட ஐவரி கோஸ்ட் அணிக்கு, 79வது நிமிடத்தில் டிரோக்பா ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இருப்பினும் இவர்களால் அடுத்தடுத்து கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பேபியானோ தேர்வு செய்யப்பட்டார்.

லீக் போட்டியில் முன்னதாக வட கொரியா அணியை வீழ்த்திய பிரேசில் அணி, நேற்றைய போட்டியில் ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் அடுத்தடுத்து இரண்டு வெற்றி கண்ட பிரேசில் அணி, 6 புள்ளிகளுடன் “ஜி பிரிவில் இருந்து முதல் அணியாக “ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

காகா “ரெட் கார்டு:
நேற்றைய போட்டியில் 85வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணி வீரருடன் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக, பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான காகாவுக்கு, “மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இதேநிலை 88வது நிமிடத்திலும் நீடித்ததால், இவருக்கு 2வது முறையாக “மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இதனால் உடனடியாக “ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

Add Comment