மக்களவையில் எம்.பி.க்கள் காட்டியது பாஜக ஏற்பாடு செய்த பணம்: ராம் ஜேட்மலானி வாதம்

லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் காட்டிய கட்டுக்கட்டான பணம், அந்தக் கட்சியே ஏற்பாடு செய்தது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் வழக்குரைஞருமான ராம் ஜேட்மலானி நீதிமன்றத்தில் வாதிட்டார். எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சமாஜவாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமர் சிங்குக்கு ஆதரவாக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் திங்கள்கிழமை ஆஜரானார்.
அரசுக்கு buy Viagra online ஆதரவாக வாக்களிப்பதற்காக தங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, ஃபாக்கன் சிங் குலஸ்தே, மகாவீர் சிங் பகோரா, அசோக் ஆர்கல் ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து காட்டிய பணக்கட்டுகள் அனைத்தையும் பாஜகவே ஏற்பாடு செய்தது என்று அப்போது அவர் கூறினார். தங்களது கட்சி உறுப்பினர்களை “வாக்களிக்க லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை அம்பலப்படுத்தியவர்கள்’ என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நாடாளுமன்றத்தில் புகழ்ந்ததையும் ராம் ஜேட்மலானி சுட்டிக் காட்டினார். பாஜகவே அந்தப் பணத்தை தயார் செய்து தங்களது உறுப்பினர்களிடம் வழங்கி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமர் சிங் லஞ்சம் வழங்கினார் என்பதற்கோ, லஞ்சப் பணத்தை ஏற்பாடு செய்தார் என்பதற்கோ எந்த நேரடியான ஆதாரமும் இல்லை என்று ராம் ஜேட்மலானி வாதிட்டார்.

ராம் ஜேட்மலானி கூறிய கருத்துகள் தில்லி போலீஸ�ர் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருக்கும் தகவல்களுக்கு முரணாக உள்ளன. அமர் சிங்கின் அறிவுரைப்படி அவரது உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா லோதி எஸ்டேட்டில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ஆர்கல்லின் வீட்டுக்குக் கொண்டுபோய்க் கொடுத்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Add Comment