உலக கோப்பை கால்பந்து: இத்தாலி திணறல் “டிரா

உலக கோப்பை கால்பந்து தொடரில் “நடப்பு சாம்பியன் இத்தாலி அணி திணறுகிறது. நியூசிலாந்துடனான லீக் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக “டிரா செய்தது. இதனால், அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென் Viagra online ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நெல்புருட்டில் நடந்த “எப் பிரிவு லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள இத்தாலி அணி, பலம் குன்றிய நியூசிலாந்தை(78வது இடம்) எதிர்கொண்டது.

இப்போட்டியில் இத்தாலி அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே “ஷாக் கொடுத்தது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் ஷேன் ஸ்மில்ட்ஸ் சாதுர்யமாக ஒரு கோல் அடிக்க, நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க இத்தாலி படை அதிரடியாக இறங்கியது. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கோல் அடிக்க முன்னேறி சென்ற டேனியலா டி ரோசியை “பெனால்டி ஏரியாவில் வைத்து சட்டையை பிடித்து இழுத்து தவறாக மடக்கினார் நியூசிலாந்தின் டாமி ஸ்மித். இதை கவனித்த நடுவர் கார்லஸ் உடனடியாக ஸ்மித்துக்கு “எல்லோ கார்டு காட்டினார். தவிர, “பெனால்டி கிக் வாய்ப்பும் கொடுத்தார். இதனை பயன்படுத்தி இத்தாலி வீரர் இகின்டா அருமையாக கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலைக்கு வந்தது. முதல் பாதி முடியும் வரை இதே நிலையே நீடித்தது.

இரண்டாவது பாதியில் நான்கு முறை உலக சாம்பியனான இத்தாலி அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது. ஆனாலும் “பினிஷிங் இல்லாததால் அரிய வாய்ப்புகள் வீணாகின. மான்டோலிவோ(70வது நிமிடம்), கோமரனாசி(89வது நிமிடம்) ஆகியோரது முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் “டிரா ஆனது.

வாய்ப்பு எப்படி?:
முதல் போட்டியில் பராகுவேயுடன் “டிரா செய்த இத்தாலி 2 போட்டிகளில் 2 புள்ளி தான் பெற்றுள்ளது. வரும் 24ம் தேதி நடக்கும் சுலோவேகியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு முந்தைய “ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேற முடியும். இதே போல நியூசிலாந்து அணி, பராகுவேயை வீழ்த்தினால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.

Add Comment