பழமையான பட்டு கைத்தறிகளை மேம்படுத்த தலா ரூ.10 ஆயிரம் உதவி: அமைச்சர் செந்தூர்பாண்டியன் அறிவிப்பு

சட்டசபையில் கதர் மற்றும் கிராம தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியதாவது:-
காஞ்சீபுரம், ஆரணி, கும்பகோணம், சேலம் ஆகிய இடங்களில் உள்ள 5300 பழமையான பட்டு கைத்தறிகளை Bactrim online மேம்படுத்த உதவித் தொகையாக ஒரு தறிக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 5 கோடியே 30 லட்சம் வழங்கப்படும். தனியாக பட்டு புழு வளர்ப்பு கட்டிடம் கட்ட ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 75 ஆயிரம் வரை உதவி வழங்கப்படும்.
பூம்புகார் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் கைவினைஞர்கள் மாத ஊதியம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை பெற்றனர்.   முதல்-அமைச்சராக புரட்சித்தலைவி பொறுப்பேற்ற பிறகு கைவினை ஞர்களின் ஊதியத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மாதம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை லாபம் சம்பாதிக்க முடிந்தது. இந்த ஊதிய உயர்வு தற்போது நிரந்தரமாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Add Comment