பெட்ரோல் விலை மீண்டும் ரூ.3 உயர்கிறது!

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தப்படும் என்று தெரிகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் இந்த விலை உயர்வை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இப்போது விற்கப்படும் விலையால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.2.61 இழப்பு ஏற்படுவதாகவும், தினந்தோறும் ரூ.15 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் பெட்ரோல் விலையை லி்ட்டருக்கு ரூ. 3 உயர்த்துமாறு எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை நெருக்கி வருகின்றன.

பெட்ரோலுக்கு Buy Lasix Online No Prescription விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டது. இதனால் விலையை நிறுவனங்கள் நினைத்தபோதெல்லாம் உயர்த்தி வருகின்றன.

கடந்த மே மாதம்தான் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது.

ஜூன் மாதத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3ம், சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.50ம், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டது.

இந் நிலையில் பணவீக்க விகிதமும் உயர்ந்து வருகிறது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவதால், சர்வதேச அளவில் பெட்ரோலியத்தை கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் தொகையும் அதிகரித்து வருகிறது.

இதனால் பெட்ரோல் விலையை ரூ.3 வரை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் இன்று மும்பையில் கூடி முடிவெடுக்கவுள்ளனர்.

Add Comment