வரலாறு படைத்த தி.மு.க. அரசின் விவரங்கள் எல்லாம் பாலபாரதி படிக்க வேண்டிய பால பாடமாகி விட்டதே என்பதுதான் நமது கவலை: கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியாக மானிய கோரிக்கை விவாதத்தை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலபாரதி பேரவையில் நன்றி தெரிவித்துப்பேசியதாக செய்தி வந்துள்ளதே?.

பதில்: 1969 ல் நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன்தான் ஆதிதிராவிடர் பழங்குடியினர் Buy cheap Bactrim நலனுக்கு “தனி இயக்குநர் அலுவலகம்” அமைக்கப்பட்டது. பின் ஆதிதிராவிடர் நலனிலும், பழங்குடியினர் நலனினும் தனித்தனியே சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்பதற்காக 2000 ஆண்டில், ஆதிதிராவிடர்   பழங்குடியினர் நல இயக்ககத்தை “ஆதிதிராவிடர் நல இயக்ககம்”, “பழங்குடியினர் நல இயக்ககம்” என இரண்டு தனித்தனி இயக்குநர்களின் கீழ் செயல்பட வழிவகுக்கப்பட்டதும் என்னுடைய ஆட்சிக்காலத்திலே தான்.

  ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிபற்றியெல்லாம் அவையிலே அந்தத் துறையின் அமைச்சர் சில புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். 1991 1996 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 696 கோடியே 16 லட்சம் ரூபாய் மட்டுமே!. ஆனால், 1996 2001 ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு 2 ஆயிரத்து 170 கோடி ரூபாய்; 2001 2006 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முந்தைய தி.மு.க. அரசைவிட வெறும் 49 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கீடு செய்து; ஐந்து ஆண்டுகளிலும் மொத்தம் அனுமதிக்கப்பட்ட தொகை ரூபாய் 2 ஆயிரத்து 219 கோடி ரூபாய் மட்டுமே!.

ஆனால், 2006 2011 ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய்; இது, முந்தைய அ.தி.மு.க. அரசு ஐந்து ஆண்டுகளில் அனுமதித்த தொகையைவிட 8 ஆயிரத்து 847 கோடி ரூபாய் அதிகமாகும்.

அதிலும், தமிழகத்தில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர்   மலைவாழ் இன மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப 2010 2011 வரவு செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 19.7 சதவீதம் தொகையை ஆதிதிராவிடர், மலைவாழ் இன மக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்து வரலாறு படைத்துள்ளதும் தி.மு.க. அரசே!. இந்த விவரங்கள் எல்லாம் பாலபாரதி படிக்க வேண்டிய பால பாடமாகி விட்டதே என்பதுதான் நமது கவலை!. இவ்வாறு அறிக்கையில் கலைஞர் கூறியுள்ளார்.

Add Comment