பிரான்ஸ் வீரர்கள் போர்க்கொடி!: உலக கோப்பையில் சர்ச்சை

பிரான்ஸ் அணியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நிகோலஸ் அனல்கா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட மறுத்தனர்.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியனான Buy cheap Ampicillin பிரான்ஸ் அணி “ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. லீக் சுற்றில் மெக்சிகோவுடன் தோல்வி அடைந்ததால், தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. இப்போட்டியின் போது பிரான்ஸ் அணி பயிற்சியாளர் ரேமண்ட் டொமேனக்கை, தகாத வார்த்தைகளால் திட்டினார் முன்னணி வீரரான நிகோலஸ் அனல்கா. இதையடுத்து அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேப்டன் பாட்ரிஸ் எவ்ரா தலைமையில் பிரான்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட மறுத்தனர். இந்த நேரத்தில் உடற்தகுதி நிபுணர் ராபர்ட் டுவர்ன் மற்றும் எவ்ரா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீரர்கள் தொடர்ந்து பயிற்சிக்கு வர மறுக்க, பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரி ஜீன் லூயிஸ் வாலன்டின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் பிரான்ஸ் அணி வரும் 22ம் தேதி நடக்கும் தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். அதே நேரத்தில் மெக்சிகோ-உருகுவே இடையிலான போட்டி, ஒருவேளை டிராவில் முடிந்தால், பிரான்ஸ் அணி வெளியேறி விடும்

Add Comment