நெல்லை: பீடி நிறுவனங்களில் திடீர் ஆய்வு

நெல்லை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் முகம்மது அப்துல் காதர் சுபைர் தலைமையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பீடி நிறுவனங்களில் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
கூட்டாய்வின் போது, மொத்தம் 110 பீடி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் பீடி மற்றும் சுருட்டு சட்டத்தின் கீழ் 44 முரண்பாடுகளும், தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் 13 முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், எடையளவு சட்டத்தின் கீழ் 7 முரண்பாடுகளும், குறைந்த பட்ச கூலிசட்டத்தின் கீழ் ஒரு முரண்பாடும், ஆக மொத்தம் 65 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த பட்ச கூலிவழங்காத 2 பீடி நிறுவனங்கள் மீது கோரிக்கை மனு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த தகவலை நெல்லை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் முகம்மது அப்துர் Buy Doxycycline காதர் சுபைர் தெரிவித்து உள்ளார்.

Add Comment