4வது நாளாக தொடர்ந்து நெல்லை-சங்கரன்கோவில் பஸ்கள் இரவில் நிறுத்தம்

சங்கரன்கோவில்: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. ஜாண்பாண்டியன் விடுவிக்கப்பட்ட நிலையிலும் நேற்று முன்தினம் சங்கரன்கோவில் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 2000 பேர் உயிர் தப்பினர்.
கலவர பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்த நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் எதிரே ஒரு சமுதாய தலைவரின் சிலை மர்ம நபர்களால் அவமரியாதை செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த Buy cheap Lasix அச்சமுதாய மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதிகளில் ஒரு கும்பல் அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்கியது. இதில் டிரைவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை காயமடைந்தனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நெல்லை, சங்கரன்கோவில், கோவில்பட்டி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சங்கரன்கோவில் வர, செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டனர். வேனை வாடகைக்கு பிடித்து ஊர்களுக்கு சென்றனர்.
சங்கரன்கோவிலில் இருந்து இரவு நேரங்களில் கடந்த 4 நாட்களாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Add Comment