புளியங்குடியில் 10 வார்டுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டி

புளியங்குடி : புளியங்குடியில் உள்ளாட்சி தேர்தலில் 10 வார்டுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடப் போவதாக செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. புளியங்குடியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் காதர்முகைதீன், Buy cheap Ampicillin மாவட்ட துணைத் தலைவர் மைதீன்பிச்சை, மாவட்ட துணை செயலாளர் லியாகத்அலி, நகர பொருளாளர் காஜாமுகைதீன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அப்துல்வகாப் வரவேற்றார். கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர் பதவிக்கும், 10,11,12,17,18,20,21,22,23,25 ஆகிய வார்டுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்றும், போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் நகர தலைவரிடம் விருப்பமனு கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர் அப்துல்ரகுமான், நகர துணைத் தலைவர்கள் முகம்மதுபாவா, அப்துல்வகாப், நகர துணை செயலாளர்கள் அப்துல்காதர், முகைதீன், அமான்உல்லா, முகம்மது இப்ராஹிம், பீர்முகம்மது, கமால், முகைதீன், சாகுல்ஹமீது, முன்னாள் நகர செயலாளர் அப்துல்ரகீம் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வக்கீல் ஜாகீர்அப்பாஸ் நன்றி கூறினார்.

Add Comment