உள்ளூர் சூழலுக்கு ஏற்ப உள்ளாட்சிதேர்தல் கூட்டணி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

உள்ளூர் சூழலுக்கு ஏற்ப உள்ளாட்சிதேர்தல் கூட்டணி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் 10 / 09 / 2011 அன்று ஆடுதுறையில் நடை பெற்றது , அந்த கூட்டத்தில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது .

நேற்று திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இந்த சூழ்நிலையில் , இன்று கடையநல்லூர் மற்றும் தென்காசி பகுதிகளில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் குற்றாலத்தில் 15 /09 /2011 அன்று நடைபெற்றது .

அக்கூட்டத்தில் திமுக வின் தன்னிச்சையான அறிக்கை குறித்தும் , உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கபட்டது .

கூட்டத்தின் முடிவில் , செய்தியாளர்களை சந்தித்த , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் பேராசிரியர் , கே.எம்.காதர் மொஹிதீன் ,எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் , மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பஞ்சாயாத்துக்கள் , ஊராட்சிகள் ஆகியவற்றின் உள்ளூர் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் , அப்படி வெவ்வேறு நிலைகளில் போட்டியிட்டாலும் , மாநிலம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் ஒரே சின்னத்தில் Amoxil online போட்டியிடுவார்கள் என்றும் கூறினார் .

ஒரு நிருபர் , கூட்டணி குறித்து கலைஞர் அறிவிக்கும் முன்பு உங்களிடம் கலந்து பேசவில்லையா என்று கேட்டதற்கு , இது திமுக எடுத்த தன்னிச்சையான முடிவு என்றும் கூறினார் .

தகவல் : நல்லூரன்

Add Comment