15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மதிமுகவின் திறந்தவெளி மாநாடு நேற்று இரவு (15.9.2011) நெல்லையில் நடந்த

 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மதிமுகவின் திறந்தவெளி மாநாடு நேற்று இரவு (15.9.2011) நெல்லையில் நடந்த

  வைது.கோ, நாஞ்சில்சம்பத், மல்லைசத்யா, பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இம்மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.

 நெல்லை மாநாடு எனக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று நினைத்தேன்.   ஆனால் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி எனக்கு இவ்வளவு பெரிய திருப்பு முனையாக இருக்கும் நினைக்கவில்லை என்று கூறியவைகோ,

நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் சரவணன், துணைச்செயலாளர் மின்னல் முகமது அலி, அரசியல்குழு உறுப்பினர் நிஜாம், மாநகர மாவட்ட செயலாளர் பெருமாள் போன்றோருக்கு தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இரவு 11.40க்கு மைக் பிடித்த வைகோ நள்ளிரவு 1.55க்கு தனது உரையை நிறைவு செய்தார்.  அவரது

உரைவீச்சில் இருந்து சில துளிகள்:
’’நான் அண்ணா அல்ல; என்னால் அண்ணா ஆகிவிடவும் முடியாது.  என் பின்னால் வருபவர்கள் வியர்வைத்துளிகள், கண்ணீர்த்துளிகள், ரத்தத்துளிகள் சிந்துவதற்கு சித்தமாக இருக்க வேண்டும்.   அப்படிப்பட்டவர்கள்தான் என்னை பின் தொடரலாம்.

நிகழ்ச்சி மட்டுமல்ல; நேரமும் சுறுக்கமாக இருக்கிறது.  இரண்டு பெரிய கழகங்களுக்கும் சொல்லிக்கொள்வேன்.   எங்கள் அண்ணாவை சொந்தம் கொண்டாட முடியாது.

அரசு மருத்துவமனைகளில் அமைச்சரோ, அல்லது தலைமை அமைச்சரோ போய் சிகிச்ச்சை எடுத்துக்கொண்டால்தான் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கும். அதிகாரத்தை மதிமுக கைப்பற்றியே தீரும்.

தமிழ்நாட்டில் 2016ல் ஆட்சி பீடத்தில் மதிமுக உட்காரும்.  1994ல் எங்கள் தலையில் பெரியி இடியே விழுந்தது.  ஸ்டெர்லைட் என்கிற அந்த ஆலை தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் ஆலையை மூடுவதற்கான முயற்சிகளோடு போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கொடுத்த அறிக்கையோ ஆலைக்கு முழுக்க முழுக்க ஆதரவாக உள்ளது.    அந்த அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது.  பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேரின் மரண தண்டனையை நீக்க வேண்டுமானால் அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும்.  அதுதான் தீர்வாக இருக்கும். அதற்கான no prescription online pharmacy கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம். ’’

முல்லை பெரியாறு அணையை உடைத்தால் பின் விளைவுகள் விபரீதம் ஏற்படும். தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்று நெல்லையில் நடந்த மதிமுக மாநாட்டில் எச்சரிக்கை விடப்பட்டது. நெல்லையில் மதிமுக சார்பில் அண்ணாதுரை 103வது பிறந்த நாள் விழா திறந்த வெளி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரமாவது: மத்திய அரசு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசு தலைவருக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். உலகில் 137 நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டது போல் இந்தியாவிலும் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் மாநில அரசின் அதிகார உரிமையை காத்து, மற்ற மாநில அரசுகளுக்கும் வழி காட்ட வேண்டும். வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்து உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மையான, திறமையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க மதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் மகத்தான ஆதரவை வழங்க வேண்டும். கேரள அரசுக்கு ஆதரவாக உள்ள மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். முல்லை பெரியாறு அணையை உடைக்கும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாவிடில் பின் விளைவுகள் விபரீதமாகும். கூடன்குளம் அணு மின் நிலையத்தை அகற்ற கோரும் அறப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து இந்த அணு மின் நிலையத்தை அகற்ற மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்திய போலீஸ் அதிகாரிகளை சஸ்பென்ட் செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு 5 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும். இனப் படுகொலை குற்றவாளி ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை கிடைக்க செய்ய வேண்டும். இலங்கையில் தமிழ் ஈழம் உருவாக்கும் இலக்கை அடைய பொது வாக்கெடுப்பை பன்னாட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். இலங்கையிலும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும் என்பதை உலக தமிழர்களும், மனித உரிமையை மதிக்கும் நாடுகளும் வற்புறுத்த வேண்டும். தமிழக அரசு கச்ச தீவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் தடுக்கவும், விலைவாசியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாதாரண, ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில்உள்ள கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் சமுதாயத்தை அவலத்தில் இருந்து காப்பாற்ற மது அரக்கனை ஒழிக்க வேண்டும். மத்திய அரசின் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை வேளாண்மை சார்ந்ததாக மாற்றி அமைத்து விவசாயிகள் பயன் பெற செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவியில் அனைவரும் பயன் பெறும் வகையில் கட்டண சானல் உட்பட அனைத்து தமிழ் சானல்களும் காட்டப்பட வேண்டும். கடலோர கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                                                                             படங்கள் :நக்கீரன்


படங்கள் :
நக்கீரன்

Add Comment