10 மாநகராட்சிகளுக்கும் மேயர் பதவிக்கான வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக

சென்னை, செப். 16: தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் பதவிக்கான அதிமுக வேட்பாளர்களை அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

சென்னை – சைதை துரைசாமி, மதுரை – ராஜன்செல்லப்பா, திருச்சி – எம்.எஸ்.ஆர். ஜெயா, கோவை – செ.ம.வேலுச்சாமி, ஈரோடு – மல்லிகா பரமசிவம், திருநெல்வேலி – விஜிலா சத்தியானந்த், சேலம் – சவுண்டப்பன், தூத்துக்குடி – சசிகலா புஷ்பா, வேலூர் – கார்த்தியாயினி, திருப்பூர் – ஏ. விசாலாட்சி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

திருச்சி, வேலூர், தூத்துக்குடி, buy Levitra online திருநெல்வேலி, திருப்பூர் , ஈரோடு ஆகிய ஆறு இடங்களில் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை: சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர் சைதை துரைசாமி (59) கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். 1984ல் சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 

கோவை: கோவை மாநகராட்சிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செ.ம. வேலுச்சாமி (57) முன்னாள் அமைச்சராவார். எம்.ஜி.ஆர். மன்ற மாநகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் அவர், பி.ஏ., பி.எல். பட்டதாரி. 2006-2011ல் பல்லடம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த செ.ம.வேலுசாமி, பொங்கலூர் தொகுதி கலைக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தொகுதி பங்கீட்டில் சூலூர் தொகுதி, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதால், செ.ம.வேலுசாமி வாய்ப்பை இழந்தார். 

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவம் (42) ஈரோடு மாநகர் மாவட்ட மகளிரணி செயலர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். பிஏ படித்துள்ளார். இவரது கணவர் பரமசிவம். ஆயில் மில் வைத்துள்ளார். 

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி வேட்பாளர் ஏ. விசாலாட்சி (39) கட்சியின் மாநில மகளிரணி துணைச் செயலாளராக உள்ளார். எம்.ஏ. பட்டதாரி. கணவர் அப்புக்குட்டி (50). 

திருநெல்வேலி: திருநெல்வேலி வேட்பாளர் விஜிலா சத்தியானந்த் (40) எம்.எஸ்ஸி, பி.எட். படித்துள்ளார். இவரது கணவர் சத்தியானந்த் சீனிவாசகம் மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் வசித்து வரும் விஜிலா சத்தியானந்த் கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அதிமுக மாவட்ட மகளிரணி முன்னாள் துணைச் செயலாளர். மேலும், மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தாளாளராகவும் அவர் உள்ளார். 

தூத்துக்குடி: தூத்துக்குடி வேட்பாளர் சசிகலா புஷ்பா (36) எம்.ஏ., டி.பி.ஏ. படித்தவர். இவரது கணவர் டி. லிங்கேஸ்வர திலகன். கடந்த ஏப்ரலில் ராதாபுரம் தொகுதி 

வேட்பாளராக சசிகலா புஷ்பா அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்தத் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதால், வாய்ப்பு இல்லாமல் போனது. 

திருச்சி: திருச்சி வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ஜெயா (54) எம்.ஏ. படித்தவர். அவரது கணவர் எம்.எஸ். ராஜேந்திரன் மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர். 

சேலம்: சேலம் வேட்பாளர் எஸ். சவுண்டப்பன் (66) 1996-2001ல் சேலம் மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், 2001-2006ல் துணை மேயராகவும் இருந்துள்ளார். இவரது மனைவி சீதாலட்சுமி இப்போது சேலம் மாநகராட்சி மன்ற 57வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

மதுரை: மதுரை வேட்பாளர் வி.வி. ராஜன் செல்லப்பா (62) எம்.ஏ. பி.எல். படித்தவர். 1992-98ல் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

வேலூர்: வேலூர் மாநகராட்சி வேட்பாளர் கார்த்தியாயினி (29), எம்.எஸ்சி. படித்தவர். தற்போது பி.எச்டி. ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவரது கணவர் டாக்டர் ஆர். அனுஷ்குமார் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி இணைச் செயலாளர்.

 

Add Comment