அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதா? வேண்டாமா? நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 29 சட்டசபை தொகுதிகளில் தே.மு.தி.க. வெற்றி பெற்றது.

 அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக அதிக எம்.எல்.ஏ.க்கள் தே.மு.தி.க. கட்சியில் இடம்பெற்றிருந்ததால், அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினருடன், இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை போயஸ் கார்டனில் நேற்று தொடங்கியது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கம்யூனிஸ்டு கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அ.தி.மு.க. குழுவினருடன், தே.மு.தி.க. கட்சி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்த போயஸ் கார்டனுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரவு 8 மணி வரை தே.மு.தி.க.வினர் இட பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.

இதனால், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க. நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வினர் சேலம், ஈரோடு, திருச்சி உள்பட 4 மாநகராட்சி மேயர் பதவியில் போட்டியிட தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு அ.தி.மு.க. தலைமை சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. 10 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களையும் அ.தி.மு.க.வினர் அறிவித்ததினால், தே.மு.தி.க.வினர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் உடனடியாக விஜயகாந்த் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் மேலும் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக Lasix No Prescription அனைத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்பு அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதா? வேண்டாமா என்று முடிவு எடுப்பார் என்று தே.மு.தி.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Add Comment