திரைமறைவு திருவிளையாடல்: அழகு நிலையம் பெயரில் 21 அழகிகள் விபசாரம்

மசாஜ் கிளப் என்ற பெயரில் சில இடங்களில் திரைமறைவு திருவிளையாடல்கள்’ நடந்து வருவதாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து போலீஸ் தனிப்படையினர் முதலில் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த அழகு கலை மசாஜ் சம்பந்தமான விளம்பரங்களில் கொடுக்கப்பட்ட முகவரிகளை சேகரித்தனர்.

 

அதில் ஒரு விளம்பரத்தில், நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை buy Viagra online அருகில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் மசாஜ் கிளப் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த மசாஜ் கிளப்பை கண்காணிக்க போலீசார் முடிவு செய்தனர். இதன்படி, குழுவில் உள்ள ஒரு போலீஸ் வாடிக்கையாளர் போல் நடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த தனியார் மசாஜ் கிளப்பில் வாடிக்கையாளர் போல் அந்த போலீஸ் அதிகாரி நுழைந்தார். வந்தவர் வாடிக்கையாளர் என்று கருதி கொண்ட மசாஜ் கிளப்பினர் அவரிடம் நைசாக,  உங்களுக்கு அழகிகள் வேண்டுமா?’ என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம் ஒரு வாடிக்கையாளர் போல் பேசி,  நான் நாளை வருகிறேன்’ என்று கூறி வெளியே வந்து விட்டார்.

அந்த மசாஜ் கிளப்பில் விபசாரம் நடப்பதை உறுதி செய்துகொண்ட போலீசார், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் உள்ளே புகுந்தனர். இதை சற்றும் எதிர்பாராத மசாஜ் கிளப்பினர் போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து விபசார தடுப்பு போலீசார் கிளப்பில் இருந்த மணிப்பூர், ஆந்திரா, கேரளா மற்றும் சென்னையை சேர்ந்த 6 அழகிகளை மீட்டனர். அவர்களை வைத்து விபசாரம் செய்து வந்த அஜீஸ்குமார் தாஸ், அவரது நண்பர் ரேணுகா என்ற பிரியா ஆகியோரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆங்கில நாளிதழ்களில் வந்த மற்ற விளம்பரங்களை கொண்டு போலீசார் சோதனை மேற்கொண்டு வந்ததில் ஏராளமான மசாஜ் கிளப்புகள் போலியாக செயல்பட்டு விபசார மையமாக செயல்பட்டது தெரியவந்தது.

அதன் பேரில் தேனி மாவட்டத்தை சேர்ந்த குமார், மதுரையை சேர்ந்த கவுசிக், ஆந்திராவை சேர்ந்த லட்சுமணன், சூளைமேட்டை சேர்ந்த ஆனந்த், சைதாப்பேட்டையில் விபசாரம் செய்து வந்த கேரளாவை சேர்ந்த ரஜீஸ், ரஞ்சித்தேவ், ஆர்.ஏ. புரத்தை சேர்ந்த ஜெகன் மோகன் ராவ், வேளச்சேரியை சேர்ந்த மகாலட்சுமி, கே.கே.நகர் ராணி, வடிவேல், கொளத்தூர் பகுதியை சேர்ந்த அகிலன், வடபழனியை சேர்ந்த ஹாரீஸ் ஆகிய 12 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த மசாஜ் கிளப்பில் இருந்த மும்பை, கல்கத்தா, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 இளம் பெண்கள் மீட்கப்பட்டன. ஏற்கனவே அமைந்தகரையில் மீட்கப்பட்ட அழகிகளையும் சேர்த்து 21 அழகிகள் மீட்கப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி மைலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னை நகரில் ஆயுர்வேத மசாஜ், அழகு நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வரும் புரோக்கர்கள் பற்றி தெரியவந்தால் அது குறித்து விபசார தடுப்பு போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுக்கலாம். எந்த விதமான உரிமமும் இல்லாமல் அழகு கலை நடத்தும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விபசாரம் செய்வது தெரியவந்தால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Add Comment