அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு அரசியல் நோக்கில் நடத்தப்படுகிறது

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த விசாரணையில் சட்ட விவகாரம் சம்பந்தமாக தொடர்புடையவர்கள் என பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல மாதங்கள் ஆகியும் கூட விசாரணை எதுவும் நடைபெறாமல், ஜாமீன் வழங்கப்படாமல்,  நீதிமன்றத்தில் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் கடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட ஏடுகள் கூட, இந்த வழக்கைக் காரணம் காட்டி விசாரணை செய்யாமல் டெல்லி திகார் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதியிருக்கிறார்கள்.
உதாரணமாக ஆங்கிலா நாளேடு 1&9&2011 தேதி தலையங்கத்தில் எந்தவிதக் குற்றத்துக்காகவும் தண்டனை வழங்கப்படாமல் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் தொடர்ந்து வைத்திருப்பது இயற்கை நீதியை மீறுவதாகும் என்றும், இந்த வழக்கில் சிறையில் வாடுபவர்களுக்கு ஜாமீன் வழங்கி இயற்கை நீதியை மீட்டெடுக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளது.

அதே நாளேடு தனது 21&6&2011 தலையங்கத்தில் ‘’2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கனிமொழிக்கு ஜாமீன் மறுத்த உச்ச நீதிமன்ற முடிவானது இயற்கை நீதியின் மிக முக்கியமான கொள்கையை மீறியதாகும். குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட ஒருவர் அப்பாவி என்றுதான் அந்த இயற்கை நீதி கூறுகிறது. கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரிக்கும்போது, இந்த வழக்கை விசாரணை செய்து வரும் மத்திய புலனாய்வு நிறுவனம் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்த பின்பு கனிமொழி ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் உள்ளனர். அது மட்டுமின்றி என்கவுன்டர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் அமிர்ஷாவும் ஜாமீனில் உள்ளார். மேலும் பலரைக் கூட உதாரணமாக எடுத்துக் காட்டலாம். தண்டனை வழங்கப்படும் வரை சிறை என்பது நிறுத்தப்பட வேண்டும்’’ என்று எழுதியிருந்தது.

20&6&2011ல் என் மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த போது, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோர் ஜாமீன் கோரியுள்ள கனிமொழி, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் வரையில் பொறுத்திருக்க வேண்டும். அதன்பின்னர், வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் கோரி மனு செய்யலாம் என்று கூறியே மூன்று மாதங்கள் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றுகின்ற சரத்குமாரையும், அந்த நிறுவனத்தில் 20 சதவீத பங்குதாரராக உள்ள கனிமொழியையும் கைது செய்து 120 நாட்களாக விசாரணை இல்லாமல், ஜாமீன் மனுக்களையும் பெற்றுக் கொள்ளாத நிலை உள்ளது. இனி அடுத்த மாதம் தான் நீதிமன்றம் திறக்கப்பட்டு ஜாமீன் பிரச்னைகளை ஆராய வேண்டும் Amoxil online என்று இதற்காக அமைந்துள்ள நீதிமன்றம், தனது பணிகளை இப்போது ஒத்திவைப்பதாகச் சொல்லி நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும் மற்றும் சிறையிலே உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்னையில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட போதிலும் கனிமொழியும், சரத்குமாரும் கலைஞர் தொலைக்காட்சி சம்பந்தமான (காசோலை மூலமாகவே) கொடுக்கல், வாங்கல், கடன் வாங்கித் திருப்பிக் கொடுத்தல் என்ற நிலையிலே தான் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நேரடியான எந்தக் குற்றச்சாட்டிலும் அவர்கள் இல்லை. இருந்த போதிலும் அவர்களையும் 120 நாட்களாக விசாரணை இல்லாமல் திகார் சிறையிலே அடைத்திருக்கிறார்கள்.

ஜாமீன் வழங்குவது சம்பந்தமாக இந்த வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று நீதிமன்றமே கூறியிருந்தது. இந்நிலையில் டிராய் நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்து, அதன் அடிப்படையில் ஒரு சிலர் வாதாடியதைக் காரணமாக வைத்து,  டிராய் நிறுவனத்தின் அறிக்கைக்காக நீதிமன்றமும் காத்திருப்பதாகச் சொல்லி மீண்டும் நீதிமன்ற நடவடிக்கை கள் மேலும் 15 நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளையும் அவற்றுக்குச் சொல்லப்படுகின்ற காரணங்களையும் கூர்ந்து பார்க்கும்போது இது முற்றிலும் அரசியல் நோக்கத்தோடு நடைபெறுகின்ற காரியமாக இருக்குமோ என்றுதான் ஐயுறத் தோன்றுகிறது. நீதிமன்றம், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் வழக்கில் ஜாமீன் மனு கொடுப்பதற்கான கால கட்டத்தை ஏற்கனவே பல நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டிருந்தும் கூட, அதை நினைவுபடுத்தி இப்போது தரப்பட்ட மனுவை நீதிமன்றம் எற்காமல் அடுத்த மாதம் முதல் வார வாக்கில்தான் அதுபற்றி ஆராயப்படும் என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறது. இதை எண்ணும்போது,  இந்த ஒரு வழக்கு, மற்ற வழக்குகளைப்போல அல்லாமல், அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே வெளிப்படையாகவே தெரிகிறது என்பதை மறைத்திடவோ, மறுத்திடவோ எவரும் முன்வர முடியாது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Add Comment