அக்டோபர் 2 முதல் 6 வரை தான்…. காலாண்டு விடுமுறை 5 நாட்களாக குறைப்பு

சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக காலாண்டு தேர்வு விடுமுறையும் அக்டோபர் 2 முதல் 6ம் தேதி வரை வெறும் 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், பள்ளிகள் ஜூன் 15ம் தேதிதான் திறக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகளில் பாடம் நடத்தப்படவில்லை. கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து கடந்த ஒரு மாதகாலமாக பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனரகம் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வை வரும் 22 முதல் 30ம் தேதி வரை நடத்த உத்தரவிட்டுள்ளது. பாடம் நடத்தாத நாட்களை ஈடுகட்ட தினமும் 35 நிமிடங்கள் மற்றும் மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு தேர்வு விடுமுறையை 5 நாட்களாகக் குறைக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி காலாண்டு தேர்வுகள் 30ம் தேதி முடிகிறது. ஆனாலும் அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். அக்டோபர் 2ம் தேதி(ஞாயிறு) முதல் 6ம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் காலாண்டு விடுமுறை விடப்பட உள்ளது. இதில் காந்திஜெயந்தி, ஆயுத பூஜை என 3 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் Buy Viagra Online No Prescription ஆகும்.

197 நாள் பள்ளி செயல்படும்: காலாண்டுத் தேர்வைத் தொடர்ந்து, அரையாண்டு தேர்வு டிசம்பர் 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்றும், அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24ம் தேதி துவங்கி ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் விடப்படும் என்றும் கூறப்படுகிறது. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.11ல் தேர்வு தொடங்குகிறது.  ஏப். 29ம் தேதி முதல் முழுஆண்டு விடுமுறை விடப்படுகிறது. மொத்த வேலை நாட்கள் 224. இதில் உள்ளுர் விடுமுறை நாட்கள் 3. தேர்வு நாள்கள் 24 நாட்கள் போக, 197 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Add Comment