கலவரத்தால் திண்டாடியவர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் உதவி!

கலவரத்தால் திண்டாடியவர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் உதவி!

பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து பஸ் போக்குவரத்து முடங்கியதால் வெளியூர்களில் இருந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் வந்த‌வர்கள் பலர் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் செய்வதறியாது தவித்தனர்.இதனையறிந்த‌ ராமநாதபுரம் சின்னக்கடையை சேர்ந்த ஜமாத்தினர், மனித நேய மக்கள் கட்சியினர், சி.ஐ.டி.யு., அமைப்பினர், அவர்களை சின்னக்கடை பகுதி பள்ளிகளில் தங்க வைத்தனர். இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக அப்பகுதியில் உள்ள‌ இஸ்லாமியர்கள் ஒவ்வொரின் வீடுகளிலிருந்தும் Buy cheap Bactrim சமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. அடுத்த நாளும் அனைவருக்கும் உணவு வழங்கினர். பின்னர் அரசு வாகனங்கள் மூலம் அருகேயுள்ள கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பாதிப்ப‌டைந்த‌வ‌ர்கள் மிகுந்த‌ நெகிழ்ச்சியுடன் உதவிய‌‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி தெரிவித்து சென்ற‌ன‌ர்

Add Comment