சவூதி அரேபியாவில் விஷவாயு தாக்கி 2 இந்தியர்கள் பலி

சவூதி அரேபியாவின் அல்கோபர் பகுதியில் விஷ வாயு தாக்கி 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

அவர்களது பெயர்கள் சமீஷ், சுனில் எனத் தெரிய வந்துள்ளது. இருவரும் அல் தமிமி சூப்பர்மார்க்கெட்டில் உள்ள கழிவறைத் தொட்டியை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கழிவறைத் தொட்டிக்குச் செல்லும் குழாயை சுத்தப்படுத்தும் பணியில், தொட்டிக்குள்ளிருந்தபடி இருவரும் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களிடமிருந்து நீண்ட நேரமாக சத்தம் ஏதும் வராததால் மேலே இருந்த ஊழியர்கள் பதட்டமடைந்து அவர்களைக் கூப்பிட்டுப் பார்த்தனர்.

இதையடுத்து இரு இந்தியர்களையும் மீட்பதற்காக எகிப்து நாட்டைச் சேர்ந்த பதே என்பர் உள்ளே போனார்.அப்போது no prescription online pharmacy அவரும் மயங்கி விழுந்தார். இதையடுத்து மீட்புப் படையினர்விரைந்து வந்த மூன்று பேரையும் மேலே கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மூன்று பேரும் உயிரிழந்திருந்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அல்கோபர் பகுதியில் இதுபோன்ற மரணம் ஏற்படுவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Add Comment