சிதம்பரத்துக்கு நேர்ந்த அவமானத்தை யாராலும் பொறுத்துக்கொள்ளவே முடியாது: கருணாநிதி கவலை.

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு நேர்ந்த அவமானத்தை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொள்ளவிருந்த கூட்டங்களுக்கு வருவதாக ஒப்புக் கொண்ட புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் வரவில்லை. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அமைச்சர் ப. சிதமபரத்திற்கு நேர்ந்த அவமானத்தை யாராலும் பொறுத்துக் கொள்ளவே முடியாது. மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி திட்டமிடத்தான் அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் பணியாற்ற வேண்டிய கலெக்டர்களே இப்படி அந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர் என்பது இங்குள்ள மேலிடத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்றார்.

மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி தணிக்கை துறை அதிகாரிகள் அறிக்கைகள் வெளியிடப்படும்போது அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவிக்கிறார்களே என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,

வேண்டுமானால் ஒவ்வொன்று பற்றியும் தனித்தனியாக விமர்சிக்கலாமே தவிர, பொதுவான கருத்தை சொல்ல முடியாது. ஆரம்பத்தில் இருந்தே தணிக்கைத் துறை அதிகாரிகளின் அறிக்கைகள் குறித்து சநந்தேகப்படும்படியான புள்ளி விவரங்களைத் தான் காட்டுகிறார்கள். முதலில் கோடிக்கணக்கில் நஷ்டம் என்று செய்தி வெளியிட்டார்கள். பின்னர் அது யூகிக்கப்பட்ட தொகை என்றார்கள். இவ்வாறு நஷ்டம் என்பதையே கேள்விக்குறியாகத் தான் தெரிவித்துள்ளனர் என்றார்.

பரமக்குடியில் வீடுவீடாக சோதனைக்கு கருணாநிதி கண்டனம்:

இதற்கிடையே ஜாதிக் கலவரம் நடந்த பரமக்குடியில் வீடுவீடாக சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் அங்கு அமைதி திரும்ப விடாமல் செய்து வருவதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு விசாரணைக் கமிஷன் அறிவித்துவிட்ட காரணத்தால் Cialis online நிதி உதவியை அதிகமாக்கித் தர இயலாது என்றும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் நான் அறிவித்தேன். விசாரணைக் கமிஷன் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இடைக்கால நிவாரணமாக ரூ.5 கோடி வழங்கினேன். கோவை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை மாறுதல் செய்தும் உத்தரவிட்டேன். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று கூறியுள்ளார்.

Add Comment