கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கா?

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கா ?

உள்ளாட்சி தேர்தல் சூடு Buy Levitra பிடிக்க ஆரம்பித்துவிட்டது . ஆளும் அதிமுக மாநகராட்சிகளுக்கும் , 52 நகராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது . மற்ற கட்சிகள் இன்னும் சுறு சுறுப்பு அடையவில்லை என்றே கூறலாம் .

ஆனால் , கடையநல்லூரில் அனைத்து கட்சிகளுமே சுறு சுறுப்பாக செயல் பட ஆரம்பித்து விட்டன . இதுவரை கடையநல்லூர் நகராட்சி தலைவர் தொகுதி ஆண்களுக்கு என்று அனைத்து அரசியல் கட்சிகளும் நினைத்து செயல் பட்டு வந்தன. ஆனால் , அதற்கு நேர் மாற்றமாக , கடையநல்லூர் நகராட்சி தலைவர் தொகுதி பெண்களுக்கு ஒதுக்க பட்டுள்ளதாக , உறுதி படுத்தப்படாத செய்திகள் கடையநல்லூர் முழுவதும் பரவலாக பேசப்படுகின்றன .
எனவே , அரசியல் கட்சிகள் சற்று திகைத்தே காணப்படுகின்றன .

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் , சேர்மன் ஆகும் பெண்ணின் கணவரோ அல்லது அவருடைய சகோதரர்களோ , பெற்றோர்களோ நகராட்சியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் ;நகராட்சி பணிகள் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள் .
மேலும் , அரசு அப்படி ஒரு முடிவு எடுக்குமானால் , அது ஒரு தலை பட்சமான முடிவாகும் என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள் .

தகவல் : நல்லூரான்

Add Comment