நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரசார் போட்டி உண்ணாவிரதம் அகமதாபாத்தில் போலீஸ் குவிப்பு

அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு போட்டியாக அகமதாபாத்தில் காங்கிரசார் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தில் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொல்லப்பட்ட Amoxil No Prescription வழக்கில், முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறிய உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை மீது அகமதாபாத் விசாரணை நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து, கலவரத்தை காரணம் காட்டி தன் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியதாக நரேந்திர மோடி கூறினார். இதைத் தொடர்ந்து, அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி அகமதாபாத்தில் 3 நாள் உண்ணாவிரததத்தை நேற்று அவர் தொடங்கினார்.
மோடியின் உண்ணாவிரத்துக்கு போட்டியாக, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சங்கர்சிங் வகேலா,  அருண் மோத்வாடி ஆகியோர் சபர்மதி காந்தி ஆசிரமம் எதிரே நேற்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கினர். இதனால், அகமதாபாத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மோடி உண்ணாவிரதம் குறித்து வகேலா கூறுகையில், ‘ஏ.சி. வளாகத்தில் பைவ் ஸ்டார் அந்தஸ்துடன் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார். இதற்காக அரசு பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. குஜராத்தில் நடந்துள்ள ஊழல்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மோடி உண்ணாவிரதம் இருக்கிறார். லோக் அயுக்தாவை செயல்படுத்த விடாமல் ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. குஜராத் அரசுக்கு ரூ.1.3 லட்சம் கோடி கடன் உள்ளது. இதைத்தான் முன்னேற்றம் என பேசுகிறார்கள்’ என்றார்.
தீ விபத்து:
முதல்வர் மோடி உண்ணாவிரதம் இருக்கும் பல்கலைக்கழக அரங்கின் நுழைவாயில் அருகே மின்கசிவு காரணமாக நேற்று தீப்பொறி ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீ பரவுவதை தடுத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Add Comment