தென்காசி நகராட்சி கடைசி கூட்டம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் கவுன்சிலர்கள் பெருமிதம்

தென்காசி: தென் காசி நகராட்சியின் கடைசி கூட்டத்தில் கவுன்சிலர்கள் என்றும் ஒற்றுமையாக இருப்போம் என ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரி வித்து கொண்டனர்.
தென்காசி நகராட்சி யின் கடைசி கூட்டம் நடந் தது. நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். ஆணையாளர் செழியன், துணைத்தலைவர் இப்ராகிம் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி தலைவர் பேசும் போது, நகராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான பணிகள் நடந்துள்ளன. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மட்டும் ரூ2.5 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகராட்சி பொது நிதி, சிறப்பு நிதி ஆகியவற்றிலும் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. இதற்காக ஒத்துழைத்த உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என் றார்.  மேலும் உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சுடலை, ரபீக்காள், நாகூர்மீரான், ராசப்பா ஆகியோரும் நன்றி தெரிவித்தனர். உறுப்பினர் விஜயலட்சுமி குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா பாடலை பாடி னார். உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி online pharmacy without prescription விடைபெற்றனர்.

Add Comment