அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி நாளை காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்

Afsal Guru
ஸ்ரீநகர்: நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி நாளை ஜம்மு காஷ்மீர் Buy Viagra சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி தமிழகத்தில் மக்கள் போராட்டம் வெடித்தது. பல்வேறு தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள், கட்சிகள் தீவிரப் போராட்டத்தில் குதித்தன. உச்சகட்டமாக காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து மூன்று பேரின் தூக்குத் தண்டனையைக் குறைத்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையி்ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டிவிட்டர் மூலம் கருத்து தெரிவிக்கையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல அப்சல் குருவின் தண்டனையையும் குறைக்க வேண்டும் என்று கோரி காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால், இப்போது உள்ளதைப் போல அமைதி நிலவும் என்பது சந்தேகம்தான் என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அப்சல் குருவை ஒமர் அப்துல்லா ஆதரிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக கேட்டிருந்தது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேச்சை உறுப்பினராக உள்ள ரஷீத் ஷேக் என்பவர் அப்சல் குருவின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார்.

இதையடுத்து இது நாளை விவாதத்திற்கு வருகிறது. விவாதத்திற்குப் பின்னர் குருவின் தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்ச் குருவுக்கு ஆதரவாக நாளை தீர்மானம் நிறைவேற்ற காஷ்மீர் சட்டசபை தயாராகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Add Comment