10ம் வகுப்பு தேர்வில் முதலிடம்:மாணவிக்கு ரூ.25 ஆயிரம் நிதி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாயை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழங்கியது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்டம் சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற நெல்லையைச் சேர்ந்த மாணவி ஜாஸ்மினுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை பிரஸ் கிளப்பில் நடந்தது. முதலிடம் பெற்ற மாணவியின் மேற்கல்விக்கு Amoxil No Prescription பயன்படும் வகையில் ஊக்கத்தொகை 25 ஆயிரம் ரூபாயை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொருளாளர் சையது அகமது வழங்கினார்.மாநகராட்சி பள்ளியில் பயின்று சாதனை புரிந்த மாணவி ஜாஸ்மினையும், அவரது தந்தை ஷேக் தாவூத்தையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியின் போது, மாநிலத் பொதுச் செயலர் அபுபக்கர், சென்னை மாவட்ட தலைவர் ஜெய்னுலாபுதீன் கலந்து கொண்டனர்.

Add Comment