துபாயில் உற‌வுகள் குறித்த‌ சொற்பொழிவு

துபாய் ஹ‌ம்ரியா ப‌ள்ளிவாச‌லில் ஜூன் 18ம் தேதியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின்ன‌ர் உற‌வின‌ர்க‌ளை நேசித்த‌ல் எனும் த‌லைப்பில் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சியில் துபாய் வ‌க்ஃப் வாரிய‌த்தினரால் ‘உற‌வின‌ரை நேசித்த‌ல்’ எனும் த‌லைப்பில் வெள்ளிக்கிழ‌மை ஜும்ஆ தொழுகையின் போது குத்பா உரை இட‌ம்பெற்ற‌து. அர‌பி மொழியில் இட‌ம்பெற்ற‌ இத‌னை த‌மிழில் காய‌ல் மௌல‌வி முஹ‌ம்ம‌து சுலைமான் ஆலிம் லெப்பை ம‌ஹ்ள‌ரி உரை நிக‌ழ்த்தினார். இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லா த‌ன‌து உரையில் சீட் டிர‌ஸ்ட் மூல‌ம் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ரும் க‌ல்வி உத‌விக‌ள், பைத்துல்மால் போன்ற‌ ப‌ல்வேறு ப‌ணிக‌ள் குறித்து விவ‌ரித்தார்.

வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ரும், பிறைமேடை மாத‌மிருமுறை ஆசிரிய‌ருமான் எம்.அப்துல் ர‌ஹ்மான் த‌ன‌து உரையில் ச‌ம‌ச்சீர் க‌ல்வியில் சிறுபான்மையின‌ருக்கு அர‌பி, உர்தூ உள்ளிட்ட‌ மொழிக‌ளுக்கு இடையூறு ஏற்ப‌டாவ‌ண்ண‌ம் ப‌ள்ள‌ப‌ட்டியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் காயிதேமில்ல‌த் 115வது பிற‌ந்த‌நாளை நினைவு கூறும் வித‌த்தில் ந‌ட‌த்திய‌ க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாட்டில் த‌மிழ‌க‌ கல்வி அமைச்ச‌ர் த‌ங்க‌ம் தென்ன‌ர‌சு அளித்த‌ உறுதிமொழியினை நினைவு கூர்ந்தார். துபாய் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் க‌ல்வி உத‌வித்தொகை குறித்த‌ விபர‌த்தினையும் தெரிவித்தார். நிக‌ழ்ச்சியினை முஹ‌ம்ம‌து ம‌ஹ்ரூப் தொகுத்து வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்வில் ஸ்கை குழும‌ இய‌க்குந‌ர் செய்ய‌து எம்.அப்துல் காத‌ர், Buy Doxycycline பி.எஸ்.எம்.ஹ‌பிபுல்லா உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

Add Comment