தமிழில் இல்லாத பெயர்ப் பலகைகள் அகற்றம்-மேயர் தலைமையில் அதிரடி நடவடிக்கை

buy Bactrim online justify;”>தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகளை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். மேயர் மா.சுப்ரமணியனே நேரடியாக களம் இறங்கி பெயர்ப் பலகைகளை அகற்றினார்.

தமிழிலிலேய வர்த்தக நிறுவனங்கள், சிறு வணிக நிறுவனங்களின் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பான பெயர்ப் பரிந்துரைப் பட்டியலையும் அது வியாபாரிகளுக்கு கொடுத்திருந்தது.

நேற்று வரை பெயர்ப் பலகைகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கினர். மேயர் மா.சுப்ரமணியனே இதில் நேரடியாக ஈடுபட்டார்.

அண்ணா சாலையில்அதிகாரிகளுடன் வந்தஅவர் தமிழில் வைக்கப்படாத பெயர்ப பலகைகளை அகற்ற உத்தரவிட்டார்.

தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகள் அனைத்தும் அகற்றப்படும் எனவும் மேயர் அறிவித்துள்ளார்.

Add Comment