மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த கணவன் படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர், buy Lasix online ராமர் (வயது 40). கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுந்தரி. அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

 

ராமரின் உறவினர் முத்து பெரியசாமி (35). இவரும் கட்டிட தொழிலாளி. தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு ஆண்டுக்கு முன்பு முத்து பெரியசாமியின் மனைவி இறந்துவிட்டார்.

உறவினர் என்ற முறையில் ராமர் வீட்டுக்கு முத்து பெரியசாமி அடிக்கடி வந்து செல்வார். இருவரும் அண்ணன் தம்பியாக பழகினர். முத்துபெரியசாமி வீட்டில் தனியாக இருந்ததால் ராமரை குடும்பத்துடன் தன் வீட்டில் வந்து தங்கும்படி வற்புறுத்தினார். அதன்பேரில், ராமர் முத்தையாபுரத்தில் உள்ள முத்துபெரியசாமி வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார்.

அப்போது அடிக்கடி சந்தித்துப் பேச சந்தர்ப்பம் கிடைத்ததால் சுந்தரியுடன் முத்து பெரியசாமி நெருங்கிப் பழகினார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. ராமருக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து போதையில் அவர் தூங்கியதும் சுந்தரியுடன் முத்து பெரியசாமி உல்லாசம் அனுபவித்து வந்தார்.

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ராமரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் மது குடிப்பதை குறைத்துக் கொண்டார். இதனால் இரவு நேரத்தில் முத்து பெரியசாமியால் முன்பு போல் சுந்தரியை சந்திக்க முடியவில்லை.

ஒருமுறை அவர்கள் நெருக்கமாக இருந்ததை ராமர் பார்த்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் ஆத்திரம் அடைந்து மனைவியை கண்டித்தார். முத்து பெரியசாமியையும் எச்சரித்தார். ராமரின் கண்டிப்பு சுந்தரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட சுந்தரி திட்டமிட்டார்.

அதன்படி, “சுந்தரியிடம் இனி பேச மாட்டேன்” என்று முத்து பெரியசாமி சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. இதை நம்பிய ராமர், குரும்பூருக்குச் சென்றபோது மீண்டும் முத்து பெரியசாமியுடன் மது குடித்தார். போதையில் தள்ளாடிய பின்னர் ராமரை குரும்பூர் ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கும் மது ஊற்றிக் கொடுத்தார். இதனால் ராமர் எழுந்து நடக்க முடியாமல் அங்கேயே படுத்து விட்டார். இது தான் தகுந்த நேரம் என்று நினைத்த முத்து பெரியசாமி, பெரிய கல்லை ராமர் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தலை நசுங்கிய ராமர் அந்த இடத்திலேயே பிணமானார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சுந்தரி, முத்து பெரியசாமியின் சதித்திட்டத்தில் ராமர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரும் போலீசாரிடம் பிடிபட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Add Comment