இடி மின்னல் இன்றும் உண்டு பகலில் கொளுத்துது வெயில் இரவில் கொட்டுது மழை

சென்னை : தமிழகம், புதுச்சேரியில் இரவு வேளையில் பெய்து வரும் இடியுடன் கூடிய மழை இன்றும் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராததால் கேரளா, கர்நாடகாவில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசி வருகிறது. காற்றின் போக்கால் வங்கக் கடலிலும் மழை மேகம் சூழ்ந்து ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட மாநில கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் நிலவி வருகிறது. இதனால் வெப்ப சலனம் ஏற்படுகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் 35 செல்சியஸ் அளவுக்கு வெயில் நிலவுகிறது. கோடை வெயில்போல் வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது. வெயிலால் ஏற்படும் வெப்ப சலனம் காலை மற்றும் மாலை நேரங்களில் இடியுடன் மழையை கொடுக்கிறது. தற்போது கேரளாவில் மழையின் அளவு குறைந்தாலும், கர்நாடகாவில் அதிக அளவில் பெய்து வருகிறது.

மேலும் ஒரிசா கடல் பகுதியில் தற்போது லேசான காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது மெல்ல நகர்ந்து ஆந்திரா கடலோரத்துக்கு வந்தால் தமிழகத்திலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதன் சாரலாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. இருப்பினும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 40 மிமீ மழை பெய்துள்ளது. கந்தர்வகோட்டை 30 மிமீ, பூந்தமல்லி, திருத்தணி, கீரனூர், திருமயம், விருதுநகர் 20 மிமீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஒரத்தநாடு, buy Bactrim online காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் 10 மிமீ மழை பெய்தது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இன்றும் இடியுடன் மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் கடலில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசும். கடலில் அலையின் சீற்றம் அதிகம் காணப்படும்.

Add Comment