செங்கோட்டை- சென்னைக்கு விரைவில் அரசு சொகுசு பஸ் இயக்க நடவடிக்கை : செந்தூர்பாண்டியன் தகவல்

செங்கோட்டை : தமிழகத்தில் அனைத்து வழித்தடங்களிலும் மக்கள் Buy Lasix பயன்பாட்டிற்காக பஸ்கள் இயக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார் என அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசினார். செங்கோட்டை- நெல்லை பாய்ன்ட் டூ பாய்ன்ட், செங்கோட்டை- சங்கரன்கோவில், கிருஷ்ணாபுரம்- குற்றாலம் மகளிர் சிறப்பு பஸ், மணிமுத்தாறு- திருமலைக்கோயில், தென்காசி- மேக்கரை, சுந்தரபாண்டியபுரம்- சுரண்டை, கூடுதல் சுற்றுகள் ஆகிய வழித்தடங்களில் பஸ்களை இயக்கும் விழா நேற்று செங்கோட்டை பஸ் ஸ்டாண்டில் நடந்தது. போக்குவரத்துறை கோட்ட பொறியாளர் மணி வரவேற்றார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்து, புதிய பஸ்களை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் 3 ஆயிரம் பஸ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. செங்கோட்டை டெப்போவில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கிட ஏற்பாடு செய்யப்படும். தற்போது 7 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் எந்தெந்த வழித்தடங்களில் எல்லாம் பஸ் வசதி தேவைப்படுகிறதோ அவற்றில் எல்லாம் பஸ்கள் இயக்கிட முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனுக்குடன் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும். செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சொகுசு பஸ் இயக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு செந்தூர் பாண்டியன் பேசினார்.

 

விழாவில் சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,துணைத் தலைவர் வி.பி.மூர்த்தி, கடையநல்லூர் தொகுதி அதிமுக செயலாளர் பொய்கை மாரியப்பன், இணை செயலாளர்கள் பி.வி.நடராஜன், எல்ஐசி முருகையா, செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு, கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா, நகர துணை செயலாளர் ராஜா, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, பேரவை செயலாளர் வக்கீல் வெங்கடேசன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், செங்கோட்டை கிளை மேலாளர் கோபாலகிருஷ்ணன், தென்காசி கிளை மேலாளர் சுப்பிரமணியன், அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளர் அன்பரசு உட்பட பலர் பேசினர். விழாவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் பரமசிவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சமீம், செங்கோட்டை நகர இளைஞரணி இணை செயலாளர் கிருஷ்ணமுரளி, 18வது வார்டு செயலாளர் ராஜா (எ) குட்டியப்பா, டெப்போ தலைவர் நாசர், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராமையா, அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன், மாணவரணி செயலாளர் முருகேசன், டெப்போ பொருளாளர் ராமையா, ஊர்மேலழகியான் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள், தென்காசி தொழிற்சங்க நிர்வாகிகள், செங்கோட்டை டெப்போ தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment