முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் கட்சிக்கே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் கட்சிக்கே தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனர் தலைவர் ப. ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தங்களுக்கு வாக்களித்தால் இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியதால் கடந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் அக்கட்சிக்கு வாக்களித்தோம். அதன் பின்பு மத்திய அரசானது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவானது அனைத்து மாநிலங்களுக்கும் சென்று முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், அரசு உதவி உள்ளிட்ட தகவல்களை சேகரித்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.

அதில், நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதம் முஸ்லிம்கள் இருப்பதாகவும், அவர்களில் 3 முதல் 4 சதவீதத்தினருக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், முஸ்லிம்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.

அந்த அறிக்கை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்டாலும், அறிக்கையின் மீது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை அறிக்கை வைக்கப்படவில்லை. அனைத்து கட்சிகளிடமும் ஒருமித்த ஆதரவைப் பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என பிரமதர் அறிவித்துள்ளார். இது முஸ்லிம்களை ஏமாற்றும் நடவடிக்கை ஆகும். அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்து என்பது எந்தக் கட்டத்திலும் வராது. குறிப்பாக, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்ப்பதையே கொள்கையாக கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து இந்த விஷயத்தில் ஒத்த கருத்தை பிரதமர் எப்படி எதிர்பார்க்க முடியும்? எல்லா சட்டங்களையும் நிறைவேற்றும் முன்பு காங்கிரஸ் கட்சி இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறதா என்பதையும் பிரதமர் விளக்க வேண்டும்.

எனவே, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் Viagra No Prescription கட்சிக்கு மட்டுமே வாக்களிப்போம். இடஒதுக்கீடு அளிக்காவிட்டால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம். தமிழ்நாட்டில் அடுத்து நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள அணிக்கே வாக்களிக்க மாட்டோம்.

இந்த கோரிக்கையை விளக்கி சென்னையில் ஜூலை 4-ல் பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. மாலையில் பேரணியும், அதன் முடிவில் தீவுத் திடலில் மாநாடும் நடைபெறும். இதில் 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்பார்கள்.

இடஒதுக்கீடு கோரிக்கையை முஸ்லிம் சமுதாய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளதால் அவர்களும் எங்கள் பேரணியிலும், மாநாட்டிலும் கலந்து கொள்வார்கள்.

இந்த மாநாட்டுக்கு பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எவரையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கவில்லை. ஆனால், நிகழ்ச்சிகளை பார்வையிட பார்வையாளர்களாக அழைத்துள்ளோம்.

அவர்களுக்கு தனி மேடையும் அமைக்கப்பட உள்ளது என்றார் ஜைனுல் ஆபிதீன்.

பேட்டியின்போது, மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான், மாவட்டத் தலைவர் யூசுப் அலி, மாவட்டச் செயலர் கே.ஏ. செய்யது அலீ, பொருளாளர் நேஷனல் சாகுல், மேலப்பாளையம் நகரத் தலைவர் ரோஷன் ஆகியோர் இருந்தனர்.

Add Comment