துபாயில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அல் ஜாபர் குழுமம் வெற்றி

துபாயில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அல் ஜாபர் குழுமம் வெற்றி

துபாய் : துபாய் தொழிலாளர் நல அமைச்சகத்தின் ஆதரவுடன் பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான ஊழியர்களுக்கிடையே நடைபெற்ற ஸ்பிரைட் கிரிக்கெட் ஸ்டார் இறுதிப் போட்டியில் அல் ஜாபர் குழும அணி அரப்டெக் அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சிறப்பு இறுதிப் போட்டியில் ஈடிஏ ஹாட்ஷாட் அணி அல் ஃபுத்தைம் அணியிடம் தோற்றது. போட்டிகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க உதவியமைக்காக ஈடிஏ நலத்துறையின் காயல் முஹம்மது சுலைமான் கௌரவிக்கப்பட்டார்.

ஈடிஏ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் போட்டியினைக் கண்டுகளிக்க சிறப்பு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் போட்டியினைக் கண்டுகளித்தனர்.

விழாவில் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள், ஈடிஏ நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா, மெல்கோ நலத்துறை அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட Buy Cialis பலர் பங்கேற்றனர்.

Add Comment