கண், சுவாசக் கோளாறு தடுக்க அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ‘ஏ’ டானிக்

அரக்கோணம் :  மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 65 லட்சம் குழந்தைகளுக்கு கண் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படுவதை தடுக்க மாநிலம் முழுவதும்  வைட்டமின் ‘ஏ‘ டானிக் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு சில குழந்தைகளுக்கு கண், சுவாசக்கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற குறைபாடுகளை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ‘ திரவம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, 6 மாத குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த வைட்டமின் ‘ஏ‘ டானிக் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வருகிற 23ம் தேதி வரை அனைத்து Buy cheap Cialis குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்க பொதுசுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. கிராம சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Add Comment