திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி மேற்கு தொகுதி Amoxil online சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என். நேரு அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட நிலம் வாங்கியது தொடர்பாக கே.என்.நேரு மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரும், அவரது தம்பி ராமஜெயம் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் நேரு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்?
அதிகாரபூர்வமாக தேர்தல் தேதி எது என்றோ? பொது தொகுதிகள் எது என்றோ? மகளிர் தொகுதிகள் எது என்றோ கூறப்படவில்லை. அதைப் பற்றி எங்கள் கட்சி சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்ளே? அவர்கள் ஆளும் கட்சி. அவர்களுக்கு எந்த எந்த இடங்கள் யாருக்கு என்று தெரியும். ஆளும் கட்சிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள உறவு குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அதனால் ஆளும் கட்சிக்கு எந்தெந்த இடங்கள் பொது இடங்கள், எவை தனித் தொகுதிக்கான இடங்கள், மகளிருக்கான இடங்கள் என்பதெல்லாம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதால்,

அவர்கள் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தெரியாமல் அந்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் என்ன செய்யப் போகிறீர்கள்? அங்கே நிற்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
வேட்பாளர் யார்?அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஒரு வழக்கு

கொல்லம் பாளையத்தைச் சேர்ந்த கருணாநிதிக்கு சொந்தமான 10,000 சதுரஅடி நிலம் திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ளது. அந்த நிலத்தை கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட சிலர் நிலத்தை பறித்துக் கொண்டதாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் கருணாநிதி புகார் அளித்தார். அதன்பேரில், கே.என்.நேரு, அவரது சகோதரர் ராமஜெயம், துணைமேயர் அன்பழகன், காங்கிரஸ் பிரமுகர் சண்முகம், அவரது சகோதரர் சேது, காமராஜ், இவரது மகன் கார்த்திக், நாகராஜ், இவரது மகன் மதன்குமார், லாரன்ஸ் ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Add Comment