கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவி ஆண்களுக்கு ஒதுக்க கோரிக்கை

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவி தொடர்ந்து ஆண் பொது பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையாளருக்கு நெல்லை மாவட்ட தேசிய லீக் கட்சி தலைவர் கமரூதின் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகராட்சி தலைவர் பதவிக்கான ஆண், பெண் இட ஒதுக்கீடு கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் கடந்த 5 ஆண்டுகள் மட்டுமே கடையநல்லூர் நகராட்சி தலைவராக ஆண் பொது Buy cheap Ampicillin பிரிவினர் பொறுப்பேற்று முடிந்துள்ளது. வருகிற தேர்தலிலும் கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு ஆண் பொது பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதுபோல் கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர் பாண்டியன், நெல்லை கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Add Comment