குஜராத்தில் நடந்தது குழாயடிச் சண்டையல்ல – மறப்பதற்கு?

நடந்தது குழாயடிச் சண்டையல்ல, மறப்பதற்கு. 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை.

2002 இனப்படுகொலையின் போது பக்கத்து வீட்டை ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு தேசாயோ, படேலோ ‘அது சலீமின் வீடு’ என்பதைப் ‘பெருந்தன்மையுடன்’ மறந்துவிட முடியும். ஆனால் வீட்டைப் பறிகொடுத்து விட்டு, அதே ஊரின் அகதி முகாமில் கையேந்தி நிற்கும் ஒரு சலீம், தனது வீட்டை எப்படி மறக்க முடியும்? தான் புணர்ந்த சிறுமிகளின் உறுப்புகளையும், கொன்ற உடல்களின் முகங்களையும் ரிச்சர்டும், பாபு பஜ்ரங்கியும் (2002 இனப் படுகொலையின் போது தாங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் பற்றி தெகல்காவிற்கு வீடியோ வாக்குமூலம் கொடுத்த கிரிமினல்கள்) மறந்துவிட முடியும். கொல்லப்பட்ட உடல்களின் உறவுகளும், உறுப்புகளின் உணர்வுகளும் எப்படி மரத்துவிட முடியும்?

மறக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் நீதி கேட்டு உச்சநீதி மன்றம் போகலாம். மனநோயாளி ஆகலாம். மருந்து குடித்துச் சாகலாம். ‘இந்தியன் முஜாகிதீன்’ ஆகலாம். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது வேறு விசயம். ஆனால் அவர்களால் ‘மறக்க முடியாது’ என்பதுதான் பொது அறிவுக்குக் கூடப் புலப்படும் உண்மை.

ஐந்து வயது ஹீரோ தனது அப்பாவைக் கொன்ற வில்லனை ஞாபகம் வைத்திருந்து, அவனைக் கொல்வதையே வாழ்க்கை Buy Levitra இலட்சியமாகக் கொண்டு, கிளைமாக்ஸ் காட்சியில் வெட்டிக் கொன்றால் அந்த ‘வெறி’ வெள்ளி விழா கொண்டாடுகிறது. என்ன செய்வது! நண்பன் தனக்கு இழைத்த அநீதியை ‘அண்ணாமலை’ மறக்கக் கூடாது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் தனது கண் முன்னே மகளைக் கற்பழித்திருந்தாலும் அப்துல்லாவாக இருக்கும் பட்சத்தில் அவன் மறக்க வேண்டும்!

குஜராத்தின் பணவாடையை முகருங்கள், பிணவாடையை மறந்துவிடுங்கள் என்கிறார் மோடி. விதர்பாவை மறந்து விடுங்கள், பங்குச் சந்தையை நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்

‘….ஆனால் நாம் காண்பது என்ன? 2002 இனப்படுகொலைக்குப் பரிசாக முதல்வர் பதவியை மோடிக்கு வழங்கினார்கள் குஜரத்தின் பெரும்பான்மை இந்துக்கள். கார்ப்பரேட் உலகத்தின் தாரகை மோடியை, டெவில்ஸ் அட்வொகேட் நிகழ்ச்சியில் நேர்காணல் செய்தார் கரண் தாப்பர். “குஜராத் சம்பவங்களுக்காக நீங்கள் ஒரு சின்ன ஸாரி சொல்லக்கூடாதா?” என்ற லெவலுக்கு இறங்கி ஒரு கேள்வி கேட்டார். உடனே பேட்டியை அத்தோடு முறித்துக் கொண்டு வெளியேறினார் மோடி.

ஒரு சின்ன ஸாரி. கலீலியோவை சித்திரவதை செய்ததற்கு வாடிகன் தெரிவித்தது போன்ற நயாபைசா பெறாத ஒரு ஸாரி. கரண் தாப்பர் கோரியது இவ்வளவுதான். ஆனால் 2002 இல் நடந்த்தை நினைவுபடுத்துவதைத்தான் மோடி விரும்பவில்லையே!

இப்படி ஒரு பச்சை இரத்தப் படுகொலையை எல்லோரும் மறந்து விட்டதனால்தான், ‘அவர்கள்’ நினைவில் வைத்திருக்கிறார்கள்.

Add Comment