ஹஜ் செல்லும் முதல் விமானம் 29-ந் தேதி புறப்படுகிறது

ஹஜ் செல்லும் முதல் விமானம் 29-ந் தேதி புறப்படுகிறது

ஹஜ் செல்லும் Cialis online முதல் விமானம் இந்தியாவில் இருந்து 29-ந் தேதி புறப்பட உள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல் விமானம்
இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வழியாக 3,530 பேர் ஹஜ் செல்கின்றனர். தமிழ்நாடு,புதுச்சேரி,அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் ஹஜ் பயணிகள் சென்னை வழியாக பயணம் மேற்கொள்கிறார்கள்.

ஹஜ் செல்லும் முதல் விமானம் 29-ந் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும். கடைசி விமானம் அக்டோபர் 31-ந்தேதி புறப்படும். இதேபோல்,சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பும் முதல் விமானம் நவம்பர் 11-ந் தேதியும் கடைசி விமானம் டிசம்பர் 11-ந் தேதியும் புறப்படும்.

பயண விவரம்
தமிழ்நாட்டை பொறுத்தவரையில்,சென்னையில் இருந்து ஜெட்டா செல்லும் முதல் விமானம் அக்டோபர் 17-ந்தேதியும்,கடைசி விமானம் அக்டோபர் 31-ந்தேதியும் புறப்படும். இதேபோல்,மெதினாவில் இருந்து சென்னை திரும்பும் முதல் விமானம் நவம்பர் 28-ந்தேதியும்,கடைசி விமானம் டிசம்பர் 9-ந்தேதியும் புறப்படும்.

சென்னையில் இருந்து ஹஜ் செல்லும் பயணிகள் நேரடியாக ஜெட்டா சென்று பின்னர் அங்கிருந்து மெக்கா செல்வார்கள். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு அதன் பிறகு மெதினா போவார்கள். அங்கு 8 நாட்கள் தங்கி இருந்துவிட்டு அங்கிருந்து சென்னை திரும்புவார்கள்.

அடுத்த ஆண்டு புதிய விதிமுறை
சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயண தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை மையத்தில் ஆஜராக வேண்டும். பயணிகள் தங்கள் விமான ஒதுக்கீட்டு நிலையை இந்திய ஹஜ் கமிட்டி இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2012-ம் ஆண்டு முதல் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியும். எனவே,அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் முன்கூட்டியே சர்வதேச பாஸ்போர்ட்டை தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பாஸ்போர்ட் காலாவதி காலம் 31.3.2013-க்கு முன்பு இல்லாததாக இருக்குமாறு உறுதி செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Add Comment