பி.இ: அரசு கல்லூரிகளில் பி.சி., எம்.பி.சி மாணவர்களுக்கு எத்தனை இடம்?

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 9 பொறியியல் கல்லூரிகளில் எல்லாப் பிரிவினரும் போட்டியிடும் ஓ.சி. பிரிவில் 1,355 இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் கோவை, சேலம், காரைக்குடி, வேலூர் பாகாயம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய இடங்களில் 6 அரசுப் பொறியியல் கல்லூரிகளும், கோவையில் 2, மதுரையில் 1 என 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.

இதில் அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,825 பி.இ. இடங்களும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,544 பி.இ. இடங்களும் உள்ளன.

இதில் 69 சதவீத இடங்கள் பி.சி, எம்.பி.சி என இட ஒதுக்கீட்டின் கீழும், 31 சதவீத இடங்கள் ஜெனரல் கேட்டகரி எனப்படும் ஓ.சி. பிரிவுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

buy Cialis online justify;”>ஓ.சி. பிரிவில் என்பது முற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.), தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) என அனைத்துப் பிரிவினரும் அடங்குவர்.

அதன்படி, எல்லாப் பிரிவினரும் போட்டியிடும் ஓ.சி. பிரிவின் கீழ் அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 876 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரியில் 479 இடங்களும் உள்ளன.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 749 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரியில் 410 இடங்களும் உள்ளன.

பிற்படுத்தப்பட்டவர்களில் முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடாக அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 99 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரியில் 55 இடங்களும் உள்ளன.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 565 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரியில் 308 இடங்களும் உள்ளன.

தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 423 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரியில் 231 இடங்களும் உள்ளன.

தாழ்த்தப்பட்ட பிரிவினரில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடாக அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 85 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரியில் 46 இடங்களும் உள்ளன.

பழங்குடியினருக்கு அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 28 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரியில் 15 இடங்களும் உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொதுப் பிரிவில் 324 பி.இ. இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 277 இடங்களும், பி்ற்படுத்தப்பட்டவர்களில் முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடாக 37 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 209 இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 157 இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததிய இன மாணவ, மாணவிகளுக்கு உள் ஒதுக்கீடாக 31 இடங்களும், பழங்குடி இன மாணவ-மாணவிகளுக்கு 10 இடங்களும் உள்ளன.

அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பொதுப் பிரிவில் 105 பி.இ. இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 90 இடங்களும், பி்ற்படுத்தப்பட்டவர்களில் முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடாக 12 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 68 இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 51 இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததிய இன மாணவ, மாணவிகளுக்கு உள் ஒதுக்கீடாக 10 இடங்களும், பழங்குடி இன மாணவ-மாணவிகளுக்கு 4 இடங்களும் உள்ளன.

குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பொதுப் பிரிவில் 197 பி.இ. இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 169 இடங்களும், பி்ற்படுத்தப்பட்டவர்களில் முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடாக 22 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 127 இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 95 இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததிய இன மாணவ, மாணவிகளுக்கு உள் ஒதுக்கீடாக 19 இடங்களும், பழங்குடி இன மாணவ-மாணவிகளுக்கு 6 இடங்களும் உள்ளன.

Add Comment