நல்லா நின்னு எரியும்… அப்துல்லாஹ்

கும்பலாய் வந்தனர்
கூடி நின்று என் அங்கம தொட்டு
அதில் ஒருவன் சொன்னான்
கிழ மரம்…
இது சொன்னவன் கையில்
கோடரி
உயர்த்திறக்கியபோது
பொத்…
ஒரே போடு

வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்…

அங்கங்கள் ஒவ்வொண்ணாய்
அவ்வப்போது தருகிறேனே
எரித்தால்
எரிந்தால் போதாதா…

தலைமையைக் காக்க
உயிரோடு பேருந்துகளும்

தமிழனைக் Buy Lasix காக்க
உடனே ஓர் இளம் தளிரும்

மதவெறியைக் காக்க
மலை மலையாய் மனிதஇனமும

வேண்டாத மருமகளை
வீட்டில் கதவடைத்தும்

பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..

தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம்

நய வஞ்சக மனித உள்ளம
நரித்தனமாய் ஆடும ஆட்டம்

மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
வேண்டுமெனில்….
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு

இப்போது அவன்

வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்

வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்…

ஆழ்மனத்தின் அலையடிப்புகள்…

Add Comment